2023 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2023 Census information in Tamil

கணக்கெடுப்பு என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன மற்றும் அதில் நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதை பற்றி கண்டறியுங்கள்.

2023 மக்கள்தொகை கணக்கெடுப்பு 2023 Census information in Tamil

கணக்கெடுப்பு என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன மற்றும் அதில் நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதை பற்றி கண்டறியுங்கள்.

கணக்கெடுப்பு என்றால் என்ன What is the census

கணக்கெடுப்பு என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடுதழுவிய அளவில் எடுக்கப்படும் கணிப்பாகும். இது ஆட்டேரோவா நியூசிலாந்திலுள்ள ஒவ்வொரு நபரின் தலை எண்ணிக்கை மற்றும் அவர்கள் வசிக்கும் அல்லது தங்கியுள்ள (வசிப்பிடங்கள்) இடங்களை பற்றிய விவரங்களை உள்ளடக்கும் அதிகாரபூர்வ கணக்கெடுப்பாகும்.

அடுத்த கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2023 அன்று நடத்தப்படும்.

ஆட்டேரோவா நியூசிலாந்து காலப்போக்கில் எத்தகைய மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள இந்த கணக்கெடுப்பு உதவும். மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பொது போக்குவரத்து போன்ற சேவைகளை மக்கள் மற்றும் சமூகங்களுக்கு வழங்க அரசு மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு திட்டமிடவும் இது உதவும்.

யாரெல்லாம் கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் Who needs to do the census

7 செவ்வாய்க்கிழமை மார்ச் 2023 அன்று ஆட்டேரோவா நியூசிலாந்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும். பின்வருவோர் இதில் அடங்குவர்:

 • நியூசிலாந்து குடிமக்கள்
 • நிரந்தர நியூசிலாந்து வசிப்போர்கள்
 • நியூசிலாந்திலுள்ள அயல்நாட்டு வசிப்போர்கள்
 • நியூசிலாந்திலுள்ள அயல்நாட்டு வருகையாளர்கள்

பின்வருபவர்களும் கணக்கெடுப்பை பூர்த்தி செய்யவேண்டும்:

 • உங்கள் வீடல்லாத ஒரு இடத்தில் வசிப்பவர்கள்
 • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்
 • முகவரியற்றோர்
 • நியூசிலாந்திற்குள் பயணம் செய்பவர்கள் அல்லது பணிபுரிபவர்கள்.

கணக்கெடுப்பில் என்னென்ன கேட்கப்படும் What you are asked in the census

கணக்கெடுப்பில் உங்களை பற்றியும் உங்கள் வசிப்பிடம் பற்றியும் (நீங்கள் வசிக்கும் அல்லது தங்கியுள்ள இடம்) மற்றும் உங்கள் வசிப்பிடத்தில் வசிக்கும் அல்லது தங்கியிருக்கும் வேறெந்த ஒருவரை பற்றியும் கேள்விகள் கேட்கப்படும்.

உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் விவரங்கள் மற்ற ஒவ்வொருவரின்   பதில்களுடனும் குழு சேர்க்கப்பட்டு ஆட்டேரோவா நியூசிலாந்திலுள்ள இடங்கள் மற்றும்   சமூகங்களை பற்றி விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களை வழங்க எங்களுக்கு உதவும்.

ஸ்டேட்ஸ் NZ உங்கள் விவரங்கள் மற்றும் அடையாளத்தை பாதுகாக்கும். நாங்கள் வெளியிடும் விவரங்களிலிருந்து உங்களை யாரும் இனம்   கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் உறுதிபடுத்துவோம்.

உங்கள் தனிப்பட்ட பதில்களை நாங்கள் யாருடனும் பகிரமாட்டோம். இது சமூக மேம்பாட்டு அமைச்சகம், Kainga Ora, நியூசிலாந்து காவல்துறை அல்லது உள்நாட்டு வருவாய் போன்ற அரசு நிறுவனங்களை உள்ளடக்கும்.

கணக்கெடுப்பு படிவங்களை நீங்கள் எவ்வாறு பெறுவீர்கள் How you will get your census forms

ஸ்டேட்ஸ் NZ இந்த கணக்கெடுப்பு மற்றும் அதில் எவ்வாறு பங்கேற்பது என்ற விவரங்களை உங்களுக்கு அனுப்பும்.

 • நியூசிலாந்தின் ஒருசில பகுதிகளில் காகித படிவங்கள் மற்றும் ஆன்லைனில் கணக்கெடுப்பை பூர்த்திசெய்ய உதவும் ஒரு அணுகல் குறியீடு அடங்கிய ஒரு கடிதம் இவற்றை உங்களிடம் வழங்க ஒரு கணக்கெடுப்பு ஊழியர் உங்கள் இடத்திற்கே வருகை தருவார்.
 • நியூசிலாந்தின் மற்ற பகுதிகளில் ஆன்லைனில் கணக்கெடுப்பை பூர்த்திசெய்ய உதவும் ஒரு அணுகல் குறியீடு அடங்கிய கடிதம் ஒன்று  குடியிருப்புகளுக்கு அனுப்பப்படும்.

நீங்கள் கணக்கெடுப்பை ஆன்லைனிலோ காகிதத்திலோ பூர்த்தி செய்யலாம் You can do the census online or on paper

உங்கள் வசிப்பிடத்தில் எது வழங்கப்பட்டாலும் நீங்கள் கணக்கெடுப்பை   ஆன்லைனிலோ காகிதத்திலோ பூர்த்தி செய்ய தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் வசிப்பிடத்தில் காகித படிவங்களை நீங்கள் பெறவில்லை அல்லது அதிக படிவங்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றன என்றால் அவற்றை கட்டணமின்றி நீங்கள் எங்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைன் மற்றும் காகித படிவங்கள் ஆங்கிலம் மற்றும் te reo Māori/ஆங்கிலம் என்ற இருமொழி வடிவில் கிடைக்கின்றன. ஆங்கில காகித படிவங்கள் பெரிய அச்சு படிவத்திலும் கிடைக்கின்றன.

காகித படிவங்களுக்கு விண்ணப்பியுங்கள் 

இலவச தொலைபேசி: 0800 CENSUS (0800 236 787)

கணக்கெடுப்பு படிவங்களை எப்போது பூர்த்தி செய்யவேண்டும் When to complete your census forms

கணக்கெடுப்பு படிவங்களை நீங்கள் கையில் பெற்ற தருணத்திலேயே பூர்த்தி செய்யலாம். இதை கணக்கெடுப்பு தினமான செவ்வாய்கிழமை 7 மார்ச் 2023 அன்றோ அதற்கு முன்னரோ பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.

கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யும் நேரத்தில் குறிப்பாக செவ்வாய்கிழமை 7 மார்ச் 2023 இரவு அன்று நீங்கள் எங்கு தங்கியுள்ளீர்களோ அந்த இடத்தை பொருட்டு படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

கணக்கெடுப்பு தினத்திற்கு பிறகும் நீங்கள் படிவங்களை பூர்த்தி செய்யலாம்.

உங்கள் கணக்கெடுப்பு படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்யவேண்டும் How to complete your census forms

கணக்கெடுப்பு இரண்டு படிவங்களை கொண்டது.

 • ஒன்று உங்கள் வசிப்பிடத்தை பற்றியது. இதற்கு பெயர் வசிப்பிட படிவம். ஒவ்வொரு வசிப்பிடத்திலும் உள்ள ஒரு நபர் மட்டுமே இதை பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து வசித்தால் யார் இதை செய்வது என்று தீர்மானித்து கொள்ளுங்கள்.
 • மற்ற படிவம் உங்களை பற்றியது இதற்கு பெயர் தனிநபர் படிவம். ஒரு வசிப்பிடத்திலுள்ள ஒவ்வொரு நபரும் தலா ஒரு தனிநபர் படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். கைக்குழந்தைகள் உட்பட தங்கள் குழந்தைகளுக்கு தலா ஒரு தனிநபர் படிவம் பூர்த்தி செய்வதை பெற்றோர்கள் அல்லது பாதுகாப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய எவ்வாறு உதவி பெறவேண்டும் How to get help to complete your census forms

உங்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய உதவி தேவைப்பட்டால் உங்கள் நம்பிக்கைக்குரிய பின்வரும் யாரேனும் ஒருவரின் உதவியை நீங்கள் நாடலாம்:

 • நண்பர்
 • குடும்ப உறுப்பினர்
 • மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்.

நீங்கள் பின்வரும் இலவச கணக்கெடுப்பு உதவி தொலைபேசி எண்ணை அழைக்கலாம் 0800 CENSUS (0800 236 787)

பின்வரும் மொழிகளில் ஒன்றை பேசும் ஒருவரின் உதவியை நீங்கள் கேட்டுப்பெறலாம்:

 • Māori
 • சமோவான்
 • டோங்கன்
 • மாண்டரின்
 • கான்டோனீஸ்
 • கொரியன்
 • ஹிந்தி
 • பஞ்சாபி

மக்கள் தங்கள் கணக்கெடுப்பை பூர்த்தி செய்ய உதவுவதற்கு எங்கள் கணக்கெடுப்பு குழு பல்வேறு இடங்களில் பயிற்சி முகாம்களை நடத்தும் 

உங்களுக்கு அருகாமையிலுள்ள ஒரு இடத்தை கண்டறிய இங்கே கிளிக் செய்யவும் (முகாம் வரைபடத்திற்கான இணைப்பு). 

உங்கள் சுய விவரங்கள் மற்றும் தனியுரிமை Your information and privacy

நீங்கள் எங்களிடம் தெரிவிக்கும் பதில்கள் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ளப்படும். இதை சட்டங்கள் மற்றும் செந்தரங்களை பயன்படுத்தியும் பல்லடுக்கு பாதுகாப்பின் உதவியுடனும் செய்கிறோம். நாங்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடும்போது உங்களையோ நீங்கள் கணக்கெடுப்பு வினாக்களுக்கு தந்துள்ள பதில்களையோ யாரும் இனம் கண்டறிய முடியாது.